மலை உச்சியில் கொடி: பக்தியா? பிரசாரமா? வனத்துறை பவர் காட்டியது!

கோவை: வெள்ளியங்கிரி மலை உச்சியில் தமிழக வெற்றிக் கழக தொண்டர் ஒருவர் புனித யாத்திரையின் ஒரு அங்கமாக கட்சிக் கொடியை ஏற்றினார். ஆனால், வனத்துறையினர் “இதுக்கு மேல மலைக்கு அரசியல் ஏற கூடாது!” என்று அதனை வேகமாக அகற்றி விட்டனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, பக்தர்கள் பிப்ரவரி 1 முதல் அங்கே ஏறி தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால், பக்தியுடன் சேர்த்து, கொஞ்சம் கட்சி பிரசாரத்தையும் மேலே கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ, கட்சி தொண்டர் கொடி கட்டிவிட்டு வந்து விட்டார்.

இதற்கிடையே, சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. “மலை உச்சியில் கொடி ஏற்றும் புதிய பழக்கம் ஆரம்பமாகிறதா?” என்று சிலர் கேள்வியெழுப்ப, வனத்துறையினர் உடனடியாக “நீங்க கீழே வாங்க” என்று கொடியை கீழே இறக்கிவிட்டனர்.

கோவை வனக்கோட்ட அலுவலர் ஜெயராஜின் உத்தரவின்படி, காவலர்கள் களமிறங்கி, கொடியை அகற்றி விட்டனர். “மலை மேல கொடி ஏற்றியவர் யார்?” என்று ஒரு விசாரணையும் நடந்து வருகிறது.

About the author: Nanban Saguni Admin
Tell us something about yourself.

Comments

No comments yet